நாகர்கோவில், மே 16:
குமரி மாவட்டம் ஆற்றூர் வேங்க விளையில் அமைந்துள்ள ஆதி மகா மேரு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தேவி திருக்கோவிலில் இன்று மண்டல பூஜை விழா நடக்கிறது.
காலை 5 மணி கணபதி ஹோமம், 6:00 மணி உஷ பூஜை, 8.00 மணி கலச பூஜை, 9.30 கலசபிஷேகம், 10 மணி பொங்காலை, 11 மணி அலங்கார பூஜை, மதியம் 12 மணி தீபாராதனை, இரவு 7 மணி புஷ்பாபிஷேகம், 8.00 மணி மகாதீபாரதனை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை மண்டல பூஜை விழா குழுவினர் செய்துள்ளனர்.