சங்கரன் கோவிலில் புதிய பார்வை தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் மகாகவி பாரதியின் 142 ஆவது அவதார தின விழா சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் பாரதி முற்றத்தில் வைத்து மகாகவி பாரதி ஓவியப்போட்டி நடைபெற்றது இப் போட்டியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்டு ஓவியம் வரைந்து போட்டியில் கலந்து கொண்டனர் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றுகளும் வழங்கப்பட்டது மேலும் ஜக்கி உலக சாதனை புத்தக பதிவிற்கான 1000க்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகள் பாரதியின் ஓவியம் வரைந்து அசத்தினர் மகாகவி பாரதி யின் அவதார தின விழாவிற்கு ஸ்ரீ கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வரும் புதிய பார்வை தலைவர் என். பழனிச்செல்வம் தலைமையில் புதிய பார்வை சேவா டிரஸ்ட் செயலாளர் எல் ஐ சி மாரியப்பன் ஜக்கி புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் நிறுவனர் தலைமை நிருபர் ஜெ.ஜேக்கப் ஞான செல்வம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர். எஸ்தர் முன்னிலையில் பாரதி பாடலை கு.வெங்கடேசன் பாடினார் ரமேஷபாபு குறளும் பொருளும் வழங்கினார் இன்று ஒரு தகவலை மாணிக்கவாசகம் வழங்கினார் புதிய பார்வைத் துணைத் தலைவர் ராமச்சந்திரன் வரவேற்புரை யாற்றினார் ஆசிரியர்எஸ் ஆறுமுக குமார் நன்றி யுரை வழங்கினார் புதிய பார்வை தன்னார்வ அமைப்பு நிர்வாகமும் ஸ்ரீ கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகமும் ஆசிரிய பெருமக்களும் புதிய பார்வை நிர்வாகிகள் செயலாளர் எம் ஆர் ராஜேந்திரன் இணைச்செயலாளர் ஆ.பாலசுப்ரமணியம் மற்றும் புதிய பார்வை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக நடத்தினார்கள்.



