மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே,
சிவரக்கோட்டையில் அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம்,
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார்.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவரக்கோட்டையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் திண்ணைப்
பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கட்சி நிர்வாகிகளுடன் வீதி வீதியாகச் சென்று அம்மா அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கி முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் திண்ணைப்
பிரச்சாரம் மேற்கொண்டார்.
கட்சி பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் , ஆணைக்கிணங்க
.மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் திருமங்கலம் தொகுதி சிவரைக்கோட்டையில் மாபெரும் திண்ணை பிரச்சார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் தமிழ்அழகன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய
கவுன்சிலர் சிவரக்கோட்டை ஆதிராஜா முன்னிலை வகித்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த திண்ணை பிரச்சாரத்தில், சிவரக்கோட்டையில் வீதிவீதியாகச் சென்று பொது மக்களை நேரில் சந்தித்து கழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை நேரில் வழங்கி திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு சிறப்புரையாற்றினார்.
பிரச்சார நிகழ்வின், நிறைவில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிவரக்கோட்டை கிராம மக்கள் அனைவருக்கும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் முன்னாள் அமைச்சர்
ஆர்.பி.
உதயகுமார் அசைவ அன்னதானம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து,
மறைந்த முன்னாள் ஊராட்சி மன்றத்
தலைவர் சின்ன கந்தசாமி குடும்பத்தினருக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாநில சார்பு அணி நிர்வாகிகள் வெற்றிவேல் புளியங்குளம் ராமகிருஷ்ணன், மாவட்ட கழக நிர்வாகிகள் முருகன், வக்கீல் திருப்பதி, உஷா சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் வேப்பங்குளம் கண்ணன், பிரபு சங்கர் அன்பழகன் ராமசாமி மாவட்ட அணி நிர்வாகிகள் சரவணபாண்டி, சிங்கராஜ பாண்டியன், சிவசக்தி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் சுகுமார், சாமிநாதன், கண்ணபிரான் பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், கண்ணபிரான், மற்றும் அம்மா பேரவை நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.