தருமபுரி மாவட்டம்,தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலக்கியம்பட்டி ஊராட்சி, கடகத்தூர்ஊராட்சி, நடு அள்ளி ஊராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.



