திண்டுக்கல் மாவட்ட காந்தி மார்க்கெட்டில் கடைக்காரர்கள் கூறிய குறைகளை சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா J. அப்துல் ரஹீம் பேட்டி.
திண்டுக்கல் மாவட்ட காந்தி மார்க்கெட்டில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில்
திண்டுக்கல் மாவட்ட தலைவர் B.ஷேக் பரீத் தலைமையில்
மாநிலத் தலைவர் தடா J. அப்துல் ரஹீம் காந்தி மார்க்கெட் ஏலம் முடிந்து மூன்று வருடம் ஆகிறது. கடை வைத்திருக்கும் அனைவருக்கும் வாகனம் நிறுத்த ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த இடத்தில் எந்த விதமான முன்னறிவிப்பு இன்றி ஒரு சில நபர்கள் கடை அமைக்க முயற்சி செய்தனர். இதை அருகில் உள்ள கடைக்காரர்கள் தடுக்க முயன்ற போது அந்த நபர்கள் திமுக கட்சிக் காரர்கள் சொல்லித் தான் நாங்கள் இந்த கடை அமைக்க வந்துள்ளோம் என்று கூறினர்.திமுக அராஜக போக்கை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
மாநிலத் தலைவர் தடா. J.அப்துல் ரஹீம் அங்கு உள்ள கடைக்காரர்கள் கூறிய குறைகளை சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கக் கூறி மாவட்டத் தலைவர் B.ஷேக் பரித் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.