திருப்பத்தூர்:ஆக:17, திருப்பத்தூர் மாவட்டம் பல்லவள்ளி கிராமத்தில் பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் சமூக மனப்பான்மையோடு குறுங்காடுகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து வரும் பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட கிரீன் கமிட்டியின் உறுப்பினர் சத்தியராஜ் தலைமை தாங்கி வழிகாட்டினார். இந்த நிகழ்விற்கு சம்பத் வரவேற்றார். குறுங்காடுகளை அமைக்க சிறப்பு விருந்தினராக ரெக்ஸ் சமுதாயக் கல்லூரியில் முதல்வர் அறிவழகன் கலந்துகொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் பேசுகையில்: இயற்கை வளங்களை பாதுகாப்பதன் மூலம் மழை வளம் பெறுவதோடு இயற்கையான காற்றோட்டமான சுவாசத்தை பெற முடியும், பருவநிலை மாற்றம் குறித்து தகவல்களை வழங்கி அறிவுரை வழங்கினார். இந்த குறுங்காடு அமைப்பு திட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரெக்ஸ் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக பசுமைத்தாய் நாடு அறக்கட்டளையின் உறுப்பினர் மகேஸ்வரி நன்றி கூறினார்.



