வேலூர் 05
வேலூர் மாவட்டம், வேலூர் சுண்ணாம்புக்கார வீதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு சோளாபுரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் யாகசாலை பூஜைகள், சிறப்பு வேள்விகள், வாஸ்து சாந்தி, கோ பூஜை, கணபதி பூஜை ,கலசங்கள் புறப்பாடு, மேளதாளங்கள் முழங்க பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், நந்தி பகவான், ஆகிய மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் பி. ஜோதிராமலிங்கம், அளங்காவலர்கள் சம்பத் ,சதீஷ்குமார் ,கௌரவத் தலைவர் கந்தசாமி, தலைவர் ஜெயராமன், உப தலைவர் ராஜா பொருளாளர் மணி, ரமேஷ் ,செயலாளர் சேகர், கார்த்திகேயன், அர்ச்சகர் கோபி ராமநாத பிரசாத், மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் ,பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.