ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க கோரி ஜாக்டோ, ஜியோ அமைப்பின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரியில் பேரணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகதில் இருந்து தொடங்கிய பேரணி பிஎஸ்என்எல் அலுவலகம் வரை சென்று முடிவடைந்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பேரணியாக சென்றனர். இந்த பேரணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கெளரன், சுருளிநாதன், ராசா, ஆனந்தன், ஆகியோர் தலைமை தாங்கினார் . பேரணியை ஜாக்டோ, ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் காமராஜ் தொடங்கி வைத்து விளக்க உரையாற்றினார். இந்த பேரணியில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



