நாகர்கோவில் – அக் – 14
குமரியின் குலசேகரப்பட்டணம் என்று அழைக்கப்படும் புலவர் விளை அருள்தரும் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மகிஷாசுரசம்ஹாரம் விழா.
வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 13-வது தசரா பெருந்திருவிழா மகிஷாசுர சம்ஹாரம் பெருந்திருவிழா புரட்டாசி 17-ம் தேதி வியாழக்கிழமை முதல் புரட்டாசி 27 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 11 நாட்க்கள் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. தினசரி மாலை ஆதிபராசக்தி பூஜையும், புலவர்களை பஜனை குழுவினரின் பஜனையும், கொலு பூஜையும், திருவிளக்கு பூஜையும், அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்று வருகிறது. பத்தாம் நாள்
நிகழ்ச்சியியான நேற்று விஜயதசமியை முன்னிட்டு காலை 6 மணிக்கு தேவி ஸ்ரீ முத்தாரம்மனுக்கு அபிஷேகமும் தீபாராதனை, கணபதி ஹோமம் , குழந்தைகளுக்கு திரு ஏடு தொடங்குதல் நிகழ்ச்சியும், மகா சக்தி ஹோம பூஜை,மகா கும்பாபிஷேகம், உச்சகால பூஜையும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் மகிஷாசுர சம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி சோபா துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக அதிமுக 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லிஜா, பாஜக 50-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜவான். ற்றி ஐயப்பன், வழக்கறிஞர் ஆனந்த், ராஜன் & கோ சி.இ.ஓ. ராஜன், எம்.எஸ்.எஸ். ஆசான் டாக்டர். எஸ். பிரகாஷ் , நாகராஜன், உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு இளநீர் அபிஷேகம், 7.30 மணிக்கு மாவிளக்கு பூஜையில் பெண்கள் மாவிளக்கு ஏந்தி அம்மனை வலம் வந்தனர். இரவு எட்டு மணிக்கு மகாலெட்சுமி அலங்கார பூஜையும் நடைபெற்றது. விழா ஏற்ப்பாடுகளை புலவர் விளை ஊர் நிர்வாக கமிட்டி தலைவர் செல்வராஜன், துணை தலைவர் சேகர், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் நாகராஜன், பொது செயலாளர் இராதாகிருஷ்ணன் மற்றும் புலவர் விளை ஊர் மக்கள் செய்திருந்தனர்.