கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சாலை பிரிவு, மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, காணியாளம்பட்டி, மேல்நிலைப்பள்ளி அருகில் மாநில நெடுஞ்சாலையான வையம்பட்டி – கரூர் சாலை (வழி) மைலம்பட்டி உப்பிடமங்கலம் சாலை கி.மீ. 32/10 ல் நான்கு வழி சந்திப்பில் அதிகப்படியான விபத்தினை தடுக்கும் நோக்கத்துடன் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட புதிய சாலை சந்திப்பு விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தன. அதனை தொடர்ந்து சாலைப்பதுகாப்பு அலகு உதவிக்கோட்டப்பொறியாளர், கண்ணன், மற்றும் உதவிப்பொறியாளர், சிவசுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். உதவிக்கோட்டப்பொறியாளர், இரா.கர்ணன் கிருஷ்ணராயபுரம் உட்கோட்டம் மற்றும் உதவிப்பொறியாளர் அ.அ. அசாருதீன், உடனிருந்தார்.



