கிருஷ்ணகிரி, மே.17-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் v.மாதேப்பள்ளியில் உள்ள ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்தப் பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி வி.பிரியதர்ஷிகா 496 மதிப்பெண்களுடன் முதலிடமும், கே.ரேகா 495 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், எல்.நளினா 494 மூன்றாம் இடமும், பெற்று சாதனை புரிந்து, மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதேபோன்று இந்த பள்ளியைச் சேர்ந்த விமல், ஜோதிகா, மேகனாஸ்ரீ, மதுமிதா, மாசினி, ரூபினி, ஆகியோர் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். மேலும் கணிதத்தில் 35 பேர், அறிவியலில் 63 பேர், சோசியல் 48 பேர், 100/100 மதிப்பெண்களும், 450/500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 46 பேரும், 400/500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் 53 பேரும், பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஸ்ரீமாருதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெயராமன், துணைத் தாளாளர் நவீன்குமார், செயலாளர் திருமதி.தனுஜா ஜெயராமன் மற்றும் ஆசிரியர்கள் பொறுப்பாசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து, முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு இனிப்பு, மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கி பாராட்டினர். மேலும் இந்த பள்ளியில் நூறு சதவீத தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர் பெருமக்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
பட விளக்கம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் v.மாதேப்பள்ளி யில் உள்ள மாருதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர், துணைத் தாளாளர், செயலாளர், ஆகியோர் வெற்றிக் கோப்பை வழங்கி பாராட்டிய போது எடுத்த படம்.
கிருஷ்ணகிரி v.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை



