கிருஷ்ணகிரி, டிசம்பர் 11 –
கடந்த 12ம் தேதி எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் ஆணைக்கிணங்க மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதிதிராவிட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்து, காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து சில காரணங்களால் அது சாலை மறியலாக மாறியது.
அதில், சிக்கபூவத்தி, தொட்டபூவத்தி கிராமங்களில், ஹிந்து சமய அறநிலைக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட நிலங்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்களில் மண்டுமாரியம்மன் கோவில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிலர், தலித் மக்களை ஏவி, வன்னியர் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் பிரச்னை ஏற்படுத்துகின்றனர்.
இது குறித்து கலெக்டர், இந்து சமய அறநிலைத்துறைக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. கோவில் நிலங்களை அரசு கையப்படுத்தினால், இரு தரப்பினருக்குமான பிரச்னை தீரும், ஒட்டையனுார் கிராமத்தில், ஆடு, மாடு மேய்க்க ஒதுக்கப்பட்ட 45 ஏக்கர் நிலங்கள் 2014ம் ஆண்டுவரை அரசு புறம்போக்கு நிலங்களாக இருந்தது. 2016ல் இந்த நிலம் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது. இது குறித்து போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை.
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 40 ஆண்டுகளாக நிலங்கள் கையப்படுத்தப்பட்தே தவிர அந்த மக்களிடம் ஒப்படைக்கவில்லை. காரணம் நீதிமன்ற வழக்கு தொடுத்து, அந்த வழக்கை தொடராததால், கிடப்பில் போட்டுள்ளனர். அந்த மக்களுக்கு 2 சென்ட் பட்டா கொடுக்க வேண்டிய அரசு, அவர்களிடம் இருப்பிடத்தை தக்க வைக்க முயற்சி செய்யாமல், ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்களையே மீண்டும், இ பட்டா என 85,000 பட்டா வழங்கியதாக தவறான தகவலை சொல்லியுள்ளனர். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஊத்தங்கரை தாலுகா சுன்னாலம்பட்டி கிராமத்தில், 7 ஏக்கர் நிலம் கையப்படுத்தி, 240 அரசு ஊழியர்கள் மற்றும் எஸ்.சி., பிரிவு மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் கேட்டால் கொடுக்காமல் நிர்வாகம் மறுக்கிறது. இலவச வீட்டுமனை பட்டா என சொல்லி நிலம் பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண்டியப்பனுாரில் பட்டா வழங்கப்பட்ட மக்களுக்கே மீண்டும் சுன்னாலம்பட்டியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 12ல், மாவட்ட ஆட்சியரையோ, தனி வட்டாட்சியரையோ முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுப்போம். திருப்பத்துார் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., உள்ள கிருஷ்ணராஜன் அங்கு பணிபுரியாமல், விதிமுறைக்கு மீறி சேலம் விஜிலென்சில் வேலை செய்கிறார். 30 எஸ்.சி., பிரிவைச் சேர்ந்த பணம் வாங்காத அரசு அலுவலர்கள் டேபிளில் பணத்தை வைத்து லஞ்சம் வாங்கியதாக திட்டமிட்டு வழக்கு பதிவு செய்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையல் பணியாற்றிக் கொண்டு, இவரே லஞ்சம் வாங்கி குவித்து, பங்களா கட்டி, பினாமி பெயரில் சொத்து சேர்த்ததோடு, பட்டியல் சமூக மக்கள் மீது வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்துள்ளதை நாங்கள் வன்மையாக கண்டித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய தயாராக உள்ளோம் என கூறினார். ஆலபட்டி ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
ஊத்தங்கரை கலைஞர் நகர் பகுதி மக்கள், தங்களுக்கு தகுதி இருந்தும் வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என கூறி 200 க்கும் மேற்பட்ட மக்கள் குடிசை அமைக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பரப்பரப்பும் பதட்டமும் நிலவியது. இது குறித்து தகவல் அறிந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் முருகன், வட்டாட்சியர் ராஜலட்சுமி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.



