கன்னியாகுமரி அக் 3
குமரி மாவட்டம் கொட்டாரத்தில் பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு கொட்டாரம் சந்திப்பில் அமைந்துள்ள காமராஜர் உருவச்சிலைக்கு கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இதில் மாவட்ட பொது செயலாளர்கள் சி.ராமச்சந்திரன், நாராயணன், மாவட்ட அமைப்பு செயலாளர் இசக்கிபாண்டியன், வட்டார செயல் தலைவர் எஸ்.ஜார்ஜ், கொட்டாரம் பேரூராட்சி கவுன்சிலர் எஸ்.கிறிஸ்டோபர், கொட்டாரம் பேரூர் காங்கிரஸ் துணைத்தலைவர் பி.எஸ்.பாபு, வார்டு காங்கிரஸ் தலைவர்கள் பிரபு, நாகேந்திரன், பரமார்த்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.