நாகர்கோவில் டிச 3
இந்திய நீரமூழ்கி கப்பல் மோதி இறந்த குமரி மீனவருக்கு மத்திய அரசு 50 லட்சம் ருபாய் மாநில அரசு 25 லட்சம் ருபாய் நிவாரணம் வழங்க பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் அருட்பணி சர்ச்சில், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருட்பணி டன்ஸ்ட்டன், கொட்டில்பாடு பங்குதந்தை ராஜ் மற்றும் கொட்டில்பாடு பங்கு நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சியாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில் பாட்டை சார்ந்த ஜெரேமீயாஸ் மகன் ஜெனிஷ்மோன், மைக்கேல்நாயகம் மகன் கிளைமான்ஸ், ஆந்திர பிரதேஷ் மாநிலத்தை சார்ந்த இரண்டு மீனவர்கள், ஒரிசாவை சார்ந்த இரண்டு மீனவர்கள், மேற்குவங்கத்தை சார்ந்த ஆறு மீனவர்கள் உட்பட 13 மீனவர்கள் இம்மாதம் 15ஆம் தேதி கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் பகுதியை சார்ந்த லிஜு மைக்கேல் என்பவருக்கு சொந்தமான மார்தோமா என்ற விசைப்படயகில் இம்மாதம் 15 ஆம் தியதி ஆழ் கடலுக்கு மீப்பிடிக்க சென்றனர். இம்மாதம் 21 ஆம் தியதி கோவா கடலில் சுமார் 70 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இந்திய கப்பல் படைக்கு சொந்தமான நீர் மூழ்கி கப்பல் மீனவர்களின் படகின் மீது மோதியதுடன் படகையும் நொடி பொழுதில் மூழ்கிகடித்துவிட்டது.
ஆறு மீனவர்கள் கோவா மீனவர்களால் மீட்கப்பட்டனர். ஐந்து மீனவர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு மீனவர்கள் படகுடன் கடலுக்குள் மூழ்கிவிட்டனர். கொட்டில்பாடு மீனவர் ஜெனிஷ்மோன் உடல் ஒன்பது நாட்களுக்கு பின் மும்பையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. எனவே
இந்திய அரசுக்கு சொந்தமான நீரமூழ்கி கப்பல் மோதி இறந்த குமரி மீனவருக்கு மத்திய அரசு 50 லட்சம் ருபாய் மாநில அரசு 25 லட்சம் ருபாய் நிவாரணம் வழங்க வேண்டும்
இறந்த மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்
மீனவரது உடல் மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட செலவை மீவளம் மற்றும் மீனவர் நலத்துறை ஏற்க வேண்டும்
கடலில் மீனவர்களுக்கு தொழில் பாதுக்காப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்
மும்பை எல்லோ கேட் கடலோர காவல் நிலையத்தில் விபத்து ஏற்படுத்திய இந்திய நீரமூழ்கி கப்பல் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பத்திய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.