நாகர்கோவில் ஆக 24
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள காஞ்சிரங்காட்டுவிளை, முள்ளங்கினாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார், இவர் முள்ளாங்கினாவிளை பகுதி சேர்ந்த கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார், இந்நிலையில் தான் வெளிநாட்டில் இருப்பதால் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்திற்கு அனுப்புவதற்காக தனது தம்பியான சசிகுமாரை பயன்படுத்தி உள்ளார்,அவர் மூலமாக ரூபாய்களை அனுப்பி அதை குடும்பத்திற்கு வழங்கி வந்துள்ளார், அப்போது ஜோசின் மனைவியை, சசிகுமார் காரில் உதவியாக கடைகளுக்கு அழைத்து செல்வது என்று வாடிக்கையா வைத்துள்ளார், இந்நிலையில் சசிக்குமாருக்கு கவிதா மீதும் கவிதா விடம் இருக்கும் நகை பணத்தின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது, அதை அபகரிக்கும் முயற்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கவிதா அடகு வைத்த நகையை மீட்பதற்காக சசிகுமாரின் டாடா சுமோ காரில் கருங்கல் பகுதிக்கு சென்றுள்ளார்,அங்கு கவிதா நகைகளை திருப்பிக் கொண்டு சசிகுமார் காரில் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார் ஆனால் சசிகுமார் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் காரை வேறு திசைக்கு ஓட்டியுள்ளார் அப்போது கவிதாவை,அண்ணனின் மனைவியின் என்றும் பாராமல் கற்பழிக்கும் முயற்சி செய்துள்ளார் இதனால் தலையில் அடித்தும் காரில் ஆங்காங்கே இடித்தும் துன்புறுத்தி கவிதாவை கொலை செய்துள்ளார் மேலும் நகைகளை அபகரித்துக் கொண்டு, காரை ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாழாக்குடி பகுதியில் ஒரு புதருக்குள் கொலை செய்த கவிதாவோடு காரையும் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார், பின்னர் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணையில் கொலை செய்த சசிகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார் பின்னர் ஜாமினில் வெளிவந்த நிலையில் வழக்கு நடைபெற்று வந்தது இந்நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் அண்ணனின் மனைவியை கொலை செய்த சசிகுமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.