குளச்சல், நவ. 21 –
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு குளச்சலில் மீனவர் காங்கிரசார் சார்பில் மீனவர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்டார்வின் தலைமையில் பீச் ஜங்ஷனில் வைத்து
கேக் வெட்டியும், நல திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை கன்னியாகுமரி பாரளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சார்பில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மீனவர் காங் மாநில தலைவர் ஜோர்தன், மாவட்ட தலைவர் கே.டி.உதயம், குளச்சல் காங்கிரஸ் நகர தலைவர் சந்திரசேகர், யூசுப்கான், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி வதனா நிஷா, மீனவர் காங்கிரஸ் செயல் தலைவர் லாலின்,இளைஞர் காங்கிரஸ் லாரன்ஸ், தர்மராஜ், அந்திரியாஸ், ஆஞ்சிலிஸ், பிராங்கிளின், பாஸ்டின், ஜவஹர், கடிகை ராஜன், சார்த்தே, பென்சிகர், அந்தோணிதாசன், அமல்ராஜ்.மணி, கென்றி, ரஹீம், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



