நாகர்கோவில், நவ. 15 –
குமரி மாவட்டத்தில் மக்கள் பணி செய்வதற்காக மாவட்ட ஆட்சியரும், சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பணி அமர்த்தப்பட்டு இவர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் மருத்துவர் ஸ்டாலின் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை மாவட்ட முழுவதும் குற்ற சம்பவங்கள், விபத்துக்கள் போன்றவைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் கணிசமாக குறைந்துள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையினரின் பார்வையில் இருந்து தப்ப முடியாது என்ற ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியவர் எஸ்பி ஸ்டாலின் ஆகும்.
இவரின் வருகைக்குப் பின் மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டம், போதை வாலிபர்களின் அட்டூழியம், இரவு நேரங்களில் இளைஞர்கள் சுற்றுவது, டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்துகள், சுமார் 80 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது. இதனால் மாவட்ட மக்கள் சற்று மன நிம்மதியுடன் இருந்து வருகின்றனர்.
இவரின் துணிச்சல் மிக்க செயலால் அனுமதி இன்றி இயங்கிய கல் குவாரி அடைக்கப்பட்டது, இரவில் இளைஞர்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக நிறுத்தியது, குற்றவாளிகளை பிடிப்பது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது அனைத்து கிராமங்களிலும் காவலர்களை அமர்த்தி பொதுமக்கள் போலீஸ் நல்லுறவை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் காவல் நிலையங்களில் பொதுமக்கள் வழக்கு சம்பந்தமாக சென்றால் மரியாதை உடன் நடத்துவது, வயதானவர்கள் வீட்டில் இருந்தபடியே காவல் நிலையத்தை தொடர்பு கொள்வது, சமூக நலனை முன்னிலைப்படுத்துவது, கடமை உணர்வை உயிராக நினைத்து பணி செய்வது, அர்ப்பணிப்போடு பணியாற்றுவது, பெண்கள் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்தி நிமிர் திட்டத்தை அறிமுகம் செய்து பெண் காவலர்களை ரோர்ந்து பணியில் ஈடுபடுத்தி வருவது என அனைத்து விதத்திலும் தன்னுடைய பணியில் தனி ஒருவராக முத்திரை பதித்து வருகிறார்.
இவ்வாறு 24X7 மக்களுக்காக காவல் பணி செய்து வரும் இவர் மீது சொந்த ஆதாயத்திற்காக மக்கள் மத்தியில் பிரபலம் அடைய சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நோக்கில் அவருடைய புகைப்படத்தை வலைத்தளங்களில் பரவ விட்டு அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க மலிவான தரம் தாழ்ந்த கருத்துகளை வலைதளவாசி பரப்புவது காவல்துறையில் நேர்மையான பணியை அவமதிப்பது ஆகும்.
எஸ் பி ஸ்டாலினின் எளிமையான அணுகுமுறை, நேர்மை அவர் முன்னெடுக்கும் சிறப்பான பணி அனைவரையும் கவர்ந்து வருவதால் அவரை ஒரு எடுத்துக்காட்டாக நினைத்து அவரை சந்தித்து அவருடன் சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்படுவது வழக்கம்.
இளம் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டாக திகழ்ந்துவரும் எஸ்பி ஸ்டாலின் இளம் தலைமுறைகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
அவ்வாறு அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் இளம் தலைமுறையினர்களில் சிலர் அதை வைத்து கொண்டு சில அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடடு அவரின் நட்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டு அவர் செய்யாத தவறுக்காக அவர் மீது வீண்பழி சுமத்த நினைக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கும் ஒரு சில சமூக வலைதள வசை பாடிகளின் நோக்கம் எஸ் பி ஸ்டாலினின் நேர்மையை பொய் ஆக்குவதற்காக எடுக்கப்படும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
ஒரு மாவட்டத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை கையாளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் இருந்து புகைப்படம் எடுத்து அதை தவறாக பயன்படுத்தி வருவது மட்டுமல்லாமல், வார்த்தை விளையாட்டு விளையாடி அவரைக் குறித்து வசை பாடுவதும், வலைதள விரும்பிகளின் தற்போதைய பொழுதுபோக்காக உள்ளது.
ஆகவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை வைத்து சில கருத்துக்களை பதிவிட்டு அதை பரவ விட இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இவரின் சமூக வலைதள கணக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்டதா, போலிக்கணக்கா போன்றவற்றை காவல்துறையினர் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படும் பத்திரிகைகள் கூட காவல்துறையினரின் அனுமதியுடன் தான் குற்றவாளிகளின் புகைப்படத்தை கூட வெளியிடுகின்றன.
பத்திரிகை துறை போலியான செய்திகளையோ உண்மைக்கு புறம்பான தகவல்களையோ எப்பொழுதுமே வெளியிடாது. ஆனால் சமூக வலைதளங்களில் ஆதிக்கம் அதிகரித்து யார் ஒருவர் மீதும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சமூக வலைதளங்கள் வெகுவிரைவில் வெளியிட்டு விடுகின்றனர்.
பத்திரிகை ஒரு செய்தியின் உண்மை தன்மையை ஆராய்ந்து அறிந்து அதன் பின்னரே செய்தி வெளியிடுகிறது. சமூக வலைதளங்களில் பொய் சொல்பவர்கள் அதிகமாகி விட்டனர். மக்களை திசைதிருப்ப சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இணைய பழக்கம் அதிகமாகிவிட்டது. அதேசமயம் சைபர் கிரைமும் அதிகமாகிவிட்டது. அவதூறு செய்திகளை மக்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். இது ஒரு குரூரமான செயல். மற்றவர்கள் கஷ்டப்படுவதை ரசிப்பது எந்தமாதிரியான மனநிலை. அர்த்தம் இல்லாத பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதில் யாரை குறை சொல்வது, யாரைப் பற்றி பேசுவது என்றில்லாமல் என்ன வேண்டுமானலும் பேசி நிறைய பார்வையாளர்கள் வேண்டும் என நினைக்கின்றனர்.
சமூக வலைதளங்களை பயன்படுத்தி சமூக நடைமுறை விரோத செயல்களை செய்து பொய்யான தகவல்களை உண்மையாக்க முயற்சிக்கும் இவர்களை கண்காணித்து இவர்களுக்கு சரியான தண்டனை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்களின் கருத்தாக உள்ளது.



