களியக்காவிளை, டிச. 9 –
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (43). ரேஷன் கடை ஊழியராக உள்ளார். சம்பவ தினம் களியக்காவிளை பகுதியில் பணிக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது துப்புரமூலை என்ற பகுதியிலுள்ள பஸ் நிறுத்தம் அருகே வரும்போது அதே பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் சுனில்குமார் (50), கொத்தனார் ராஜு (58), ஆட்டோ டிரைவர் வினோ (53) ஆகிய 3 பேரும் சேர்ந்து அனில்குமாரை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது அவர் பலத்த காயமடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் கலியாக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து அனில் குமாரை தாக்கிய 3பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


