குளச்சல், டிச .20 –
கருங்கல் அருகே மிடாலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அவர் அந்த பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.
சம்பவதினம் காலை மாணவி பாட்டி வீட்டில் உள்ள குளியலறைக்கு குளிக்க சென்றார். அப்போது குளியறையில் இருந்த திறந்த வெளி பகுதியில் செல்போனை பிடித்தவாறு கை ஒன்று தெரிந்தது. தான் குளிக்கப் போவதை வீடியோ எடுக்க முயல்வதாக நினைத்த மாணவி உடனடியாக செல்போனை பிடுங்கினார். பின்னர் உடனடியாக வெளியே வந்து பார்த்தார்.
அப்போது படம் பிடிக்க முயன்றது அதே பகுதியை சேர்ந்து தொழிலதிபரான கில்பர்ட் (49) என்பது தெரிய வந்தது. மாணவிக்கு கில்பர்ட் தெரிந்தவர் என்று கூறப்படுகிறது. தெரிந்தவரே இவ்வாறு செய்துவிட்டார் என வருந்திய மாணவி இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்தார்.
மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பெயரில் குளச்சல் மகளிர் போலீசார் மாணவி குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற தொழிலதிபர் கில்பர்ட் மீது போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தன்னை தேடும் அறிந்த கில்பர்ட் தலைமறைவானார். போலீசார் தேடி வருகின்றனர்.


