By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

Last updated: November 25, 2025 6:56 pm
November 25, 2025
82 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 24 –

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புனித சவேரியார் பேராலய திருவிழாவின் முதல் நாளான இன்று கோட்டாறு மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

வரும் டிசம்பர் 3ம்தேதி வரை நடைபெறும் 10 நாள் திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலிகள், ஆடம்பர கூட்டு திருப்பலிகள் நடக்கின்றன. 8ம் திருநாளான டிசம்பர் 1ம்தேதி மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடைபெறுகிறது. இரவு 10.30 மணிக்கு முதல் நாள் தேர் பவனி நடக்கிறது. பின்னர் டிசம்பர் 2ம்தேதி 9ம் திருநாள் அன்று ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.

டிசம்பர் 3ம் தேதி 10ம் திருநாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மலையாள திருப்பலி திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணி கிளாடின் அலெக்ஸ் தலைமையில் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு தேர் பவனியும், மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்ப கூட்டுத் திருப்பலி குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமையிலும் நடைபெறுகிறது.

திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. டிசம்பர் 8ம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கொடியிறக்கமும், புனிதர்கள் திருப்பண்டம் முத்தம் செய்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழா நாட்களில் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் அருட்சாதனம் வழங்கப்படும்.

கோட்டாறு புனித சவேரியார் பேராலய பங்குதந்தை பஸ்காலிஸ், இணை பங்கு பணியாளர் பால் கால்வெர்ட், பங்கு அருட்பணி பேரவை செயலாளர் ராஜன், உப தலைவர் வர்க்கீஸ் ராஜா, பொருளாளர் ராபின், இணை செயலாளர் ஜேசுராஜா மற்றம் பங்கு மக்கள் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். முதல் நாளான இன்று இரவு காவல்துறை சார்பில் திருவிழா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருவிழாவையொட்டி கோட்டார் காவல் நிலைய சந்திப்பு முதல் சவேரியார் கோயில் சந்திப்பு வரையிலும் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோட்டார் சவேரியார் கோயில் சந்திப்பில், மாநகராட்சி சார்பில் வடிகால் அமைக்கும் பணி வியாபாரிகள் சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
இரட்டை ரயில் பாதைக்காக நில உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சலசலப்பு; முற்றுகையிட முயன்றதால் வாக்குவாதம் பரபரப்பு
ஆலடி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா
களியக்காவிளையில் கஞ்சா வைத்திருந்த மீன் வியாபாரி கைது
நாகர்கோவில் கார், பைக்குகள் உட்பட ஒன்பது வாகனங்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பராமரிப்பு சார்பாக சமத்துவ பொங்கல் விழா

January 13, 2025
43 Views
வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
வருமான வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து செலுத்த வேண்டும் – மதுரை வருமான வரி முதன்மை ஆணையர் வசந்தன்
கொல்லங்கோடு அருகே அடகு வைத்த நகையை கொடுக்காமல் இழுத்தடிப்பு – வழக்கு பதிவு
வேலூர் பானு பிரியா ஹோமியோ கிளினிக்ல் இலவச மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account