நாகர்கோவில், டிச. 1 –
கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து 2016-ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனைத் தொடர்ந்து 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு 2021 மே 7 அன்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சசராக பதவியேற்று 2023 மே 11 அன்று இலாகா மாற்றம் செய்யப்பட்டு பால்வளத்துறை அமைச்சராக இருந்து வருவது மட்டுமல்லாமல் எனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்புடன் செய்து மக்கள் பணி செய்தும், மாவட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டும் மக்கள் பணியாற்றி வருகிறேன்.
இந்நிலையில் என் மீது ” 100 கோடி மோசடி, நீதிமன்ற உத்தரவு” என தவறான தகவல் பரப்பியதாக குற்றம் சாட்டிய தனியார் தொலைக்காட்சிக்கு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட விளக்கத்தில், “என் சகோதரி 2004ஆம் ஆண்டு நிலம் வாங்கியதும், 2014ஆம் ஆண்டு விற்றதும் பதிவுகளில் தெளிவாக உள்ளது. நான் அமைச்சரானது 2021ஆம் ஆண்டு. எனவே, நிலம் மற்றும் எனது பதவிக்குக் எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மேலும், உயர்நீதிமன்றத்தில் உள்ள W.P.No.4268/2024 வழக்கில் தொலைக்காட்சி பரப்பியது போன்ற எந்த கருத்துக்களும் இல்லை என்றும், என்னுடைய நற்பெயருக்கு திட்டமிட்டு களங்கம் உண்டாக்க முயன்ற வகையில் புறங்கூறிய ஊடகம் நீதிமன்றத்தையும் அவமதித்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். தனியார் தொலைக்காட்சி மீது விரைவில் சட்ட நடவடிக்கை பாயும், என எச்சரித்துள்ளார்.



