தேவாரம் செப் 7:
தேவாரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த கம்பம் எம்.எல்.ஏ
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் அமைந்துள்ள நகரம் கிராமம் மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு முல்லைப் பெரியாறு அணை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள்தோறும் பொது மக்களுக்கு குடிநீர் விவேகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உத்தமபாளையம் அருகே அமைந்துள்ள கோம்பை பண்ணை புரம் மற்றும் தேவாரம் ஆகிய பகுதிகள் ஆற்று பள்ளத்தாக்கின் மேடான பகுதிகளில் அமைந்திருப்பதாலும் நாளுக்கு நாள் பேரூர் பகுதிகள் விரிவடைந்து மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் காரணமாக போதிய அளவிற்கு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக பேரூராட்சி அதிகாரிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் மு க ஸ்டாலின் ரூபாய் 19 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் அமைப்பதற்கு நிதியை ஒதுக்கி உள்ளார் முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதிகளில் புதிதாக பம்பிங் ஸ்டேஷன் அமைத்து புதிய குடிநீர் உலை அமைக்கும் பணிகளை தொடங்கும் விதமாக பண்ணைப்புரம் பேரூராட்சியில் கம்ப ம் நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் நா ராமகிருஷ்ணன் தலைமையில் பணிகளை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பண்ணைப் புரம் பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி இளங்கோவன் தேவாரம் பேரூராட்சி மன்ற தலைவர் லட்சுமி பால்பாண்டி செயல் அலுவலர் பால சுப்பிரமணி இளநிலை உதவியாளர் முருகன் உள்பட பேரூராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்



