குளச்சல், ஜன. 2 –
வெள்ளிச்சந்தை அருகே மேல சங்கரன்குழி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் அஜிஸ்குமார் (23) மினி பஸ் டிரைவர். இவருக்கும் பஸ்ஸின் உரிமையாளர் கோவிந்தன் மற்றும் வினித் குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவ தினம் அஜீஸ் குமார் பேயோடு பகுதியில் சென்றபோது, அங்கு வந்த கோவிந்தன் மற்றும் வினித் குமார் மேலும் அவருடன் வந்த 4 பேர் சேர்ந்து அஜிஸ் குமாரை சாவி மற்றும் கைகளால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அஜிஷ்குமார் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் வெள்ளிச்சந்தை போலீஸாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வினீத்குமார், கோவிந்தன், ரூபன், பிரின்ஸ், ஜூத் வினா, அசோக் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் வினித் குமார் கொடுத்த புகாரின் பேரில் மூன்று பேர் மீது என இரு தரப்பிலும் 9 பேர் மீது வெள்ளிச் சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


