மார்த்தாண்டம் , நவ.29-
மார்த்தாண்டம் அருகே பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ஜான் போஸ்கோ (54). இவர் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இன்று இவர் பைக்கில் கண்காணிப்பு பணி தொடர்பாக மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பழைய கார்கள் விற்கும் கடை அருகே செல்லும்போது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்து தலை, கால் உட்பட உடலில் பல்வேறு இடங்களில் ஜான் போஸ்கோ படுகாயம் அடைந்தார். உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவரது மகன் காட்வின் போஸ்கோ (29) என்பவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டிய குலசேகரம் பகுதியை சேர்ந்த காட்வின் மோசோ என்பவர் மீது வழக்கு பதிவு செய்து செய்தனர். காட்வின் மோசோ தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


