தக்கலை, நவ. 17 –
தக்கலையில் தாலுகா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், தனி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார் நிலை கருவூலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். இதனால் இந்த வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம்.
இந்த நிலையில் இன்று வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஊழியர் ஒருவர் ஆவண காப்பக அறைக்கு சென்றார். அஙகு பீரோவின் கீழ் பகுதியில் ஏதோ அசைவதை பார்த்த ஊழியர் வெளியில் வந்து சக ஊழியர்களிடம் தெரிவித்தார். ஊழியர்கள் அங்கு வந்து பார்த்தபோது பீரோ பாம்பு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கிருந்து ஊழியர்கள் அலறி அடித்து ஓடினர்.
இது குறித்து தக்கலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீர்கள் சம்பவ இடம் வந்து ஆவண காப்பக அறை இருந்த பீரோவை தூக்கி அகற்றிய போது அதன் அடியில் சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு பதுங்கியிருந்தது தெரிய வந்தது. அதனை பிடித்த தீயணைப்பு வீரர்கள் பின்னர் வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
தாலுகா அலுவலகத்தில் மாவட்டத்தில் பல்வேறு கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக இவை அங்கே நிற்பதால் இதில் அந்த இடத்தில் முட்கள் மற்றும் செடிகள் வளர்ந்து புதர்புண்டுகளாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து உள்ள நிலையில் விஷ ஜந்துக்கள் வெளிவந்திருக்கலாம் என கூறப்படுகிறது.



