நாகர்கோவில், அக். 17 –
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள் போதையின் பாதையில் செல்லாமல் எதிர்காலத்திற்கு தேவையான சரியான பாதையை தேர்ந்தெடுக்க வழிகாட்டும் விதத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஏற்கனவே சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது டி.என்.பி.எஸ்.சி சப் இன்ஸ்பெக்டர், மற்றும் காவலர் தேர்வுக்கான எழுத்து தேர்வுகளில் பட்டதாரி இளைஞர்கள் இளம்பெண்கள் கவனம் செலுத்தும் விதத்திலும் போட்டி தேர்வுக்கு தயாராகும் விதத்திலும் பல்வேறு புத்தகங்களுடன் கூடிய “வெற்றிப்பாதை” படிப்பகம் மற்றும் இலவச டி.என்.பி.எஸ்.பி, சப் இன்ஸ்பெக்டர் காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பையும் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் எஸ் பி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் பேட்டியளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்,இந்த பயிற்சி வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6-மணி முதல் 8.30 மணிவரையும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை காலை 10-மணி முதல் மாலை 4-மணி வரை நடைபெறும் என்றும் தினம்தோறும் 45-மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் இதுவரை நடத்தப்பட்ட 22-மாதிரி தேர்வுகளில் 120-மாணவர்கள் பங்கேற்றுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.



