நாகர்கோவில், டிச. 16 –
கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவனனைந்த பெருமாள் மனைவி லீலாவதி (63). கடந்த 10ம் தேதி மாலை லீலாவதி நாகர்கோவில், செட்டிகுளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பார்வதிபுரம் அரசு பஸ்ஸில் ஏறிச் சென்றார். பார்வதிபுரம் ராஜீவ் காந்தி சிலை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கும்போது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் செயினை காணவில்லை. பஸ்ஸில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து நேசமணி நகர் போலீசில் புகார் அளித்தார்.
புகார் அளித்து 5 நாட்களுக்குப் பின் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லீலாவதி பயணம் செய்த பஸ்ஸில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அப்போது இந்த சம்பவம் நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை சீசன் ஆனதால் வெளியூர் திருட்டு கும்பல்கள் ஊடுருவி கைவரிசை காட்டி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


