புதுக்கடை, ஜன. 8 –
புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ் (39). வெல்டிங் தொழிலாளி. இவர் சம்பவ தினம் இரவு 8 மணி அளவில் தனது 10 வயது மகன் லிசோஸ் என்பவருடன் முஞ்சிறை சந்திப்பதில் உள்ள ஹோட்டலில் உணவு வாங்கி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குழித்துறை – தேங்காப்பட்டணம் சாலையில் செல்லும்போது, எதிரே அதே பகுதியை சேர்ந்த கிரிஷ்குமார் மகன் விஷ்ணு (23) என்பவர் அஜாக்கிரதையாக வேகமாக ஓட்டி வந்த மற்றொரு பைக் விமல் ராஜ் பைக்கில் மோதியது.
இதில் விமல்ராஜ் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடார். விபத்துக்கு காரணமான விஷ்ணுவும் காயமடைந்தார். அவரும் நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்த இது குறித்து விமல்ராஜ் மனைவி அனுஷா (36) என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


