வேலூர்_16
வேலூர் அடுத்த இறைவன்காடு ஶ்ரீவனதுர்கா பீடத்தில் ஶ்ரீதுர்கா அம்மாவின் திருக்கரங்களால் கலசாபிஷேகம் நடந்தது.
ஜெர்மனியில் ஹானவர் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய சண்டி ஹோம நிறைவு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து கலசாபிஷேக நிகழ்வு இந்தியா, தமிழ்நாடு, வேலூர் அடுத்த இறைவன்காடு ஸ்ரீ வனதுர்கா பீடத்தில் ஸ்ரீ துர்கா அம்மாவின் திருகரங்களால் கலசாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதை தொடர்ந்து நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இதில் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்து பார்வையாளர்களுக்கு காண்பித்தனர்.