மயிலாடுதுறை ஜூலை 24
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாலையோரங்களில் வசிப்பவர்கள் அனைவருக்கும் தினசரி காலை உணவு வழங்கி வரும் ஜோதி பவுண்டேஷன் தொடங்கிய காலத்தில் இருந்து தொடர்ந்து ஏழு வருடங்களாக சேவைகளை செய்து வருகிறது.
இந்நிலையில் ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் முன்னிலையில் எட்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மயிலாடுதுறை சுற்றியுள்ள காப்பகங்களில் மூன்று வேளை உணவு வழங்கியும், கணவரை இழந்த கைம்பெண்கள் 15 நபர்களுக்கு ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள் மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் நிதிகளை கொடுத்து உதவினர். அதேபோன்று மயிலாடுதுறை சுற்றியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்று கோல், முக கண்ணாடி , துணிகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் தேசிய இந்து திருக்கோயில் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் வெங்கடேசன், ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் தலைவர் ஆர் சேகர், இணைச் செயலாளர் சுகுமார், பொருளாளர் செந்தூர் செந்தில்நாதன் ஆலோசகர்கள் எஸ்.தியாகராஜன், மணிகண்டன், ராம்நாத்,முத்துக்குமார், அறக்கட்டளை அறங்காவலர்கள் கார்த்திகேயன், கோவி சண்முகம், ஈஸ்வர ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.