இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நினைவூட்டும் கவாத்து பயிற்சி நடைபெறுவது வழக்கம்.
அதே போன்று இந்த ஆண்டும் ஆயுதப்படை மைதானத்தில் கூட்டு கவாத்து பயிற்சி நடைபெற்றது. இதில் காவலர்களுக்கு உடல்திறன், ஆயுதங்களை கையாள்வது, கலவர கூட்டங்களை தடுப்பது மற்றும் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கவாத்து பயிற்சியின் நிறைவு நாளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் கலந்து கொண்டு காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட படைக்கலன் மற்றும் உடைமைகளை ஆய்வு செய்தார்.