ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதிய வருவாய் வட்டாட்சியராக ஜமால் முகம்மது பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் கொடியினை ஏற்றப்பட்டு வெற்றி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் பழனிக்குமார் இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



