தஞ்சாவூர் ஜூன் 15
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்காவில்ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்)மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவுகோல் உபகரணம் சரியாக உள்ளதா எனவும் ,திருவையாறு பேரூராட்சி நவீன தகன மேடை பயன்பாடுகள் குறித்தும், குப்பை கிடங்கில் குவிந்துள்ள குப்பையை பயோ மைனிக் முறையில் இயற்கை உரமாக்கும் பணி, கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூபாய் 5 கோடி மதிப்பில் கழிவுநீர் மேலாண்மையில் சுத்திகரிப்பு செய்வதற்கான முன்னேற்பாடு தள ஆய்வுப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமால், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது)சீமான், திருவையாறு வட்டாட்சியர் தர்மராஜ் , வட்டாச்சியர்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனிதா, (ஆதிதிராவிடர் நலத்துறை ) நெடுஞ்செழியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கண்டியூர் சரகத்தி ற்கு உட்பட்ட தென்பெரம்பூர், நாகத்தி, மேல திருப்பந்துருத்தி, (முதன்மை) மேல திருப்பந்துருத்தி (கூடுதல்) கீழ திருப்பந்துருத்தி, மு காசா கல்யாணபுரம், கல்யாணபுரம் 1- ஆம் சேத்தி,உப்புக்காட்சிப்பேட் டை, திருச்சோற்று துறை, கல்யாண புரம் 2ம் சேத்தி, கண்டியூர், ராஜேந்திரம், மணக்கரம்பைஆகிய கிராம ங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறு கிறது.