By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி திமுகவால் தலைமைக்கு தொல்லையா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி திமுகவால் தலைமைக்கு தொல்லையா?
கனஂனியாகுமரி

குமரி திமுகவால் தலைமைக்கு தொல்லையா?

Last updated: March 31, 2025 10:49 pm
March 31, 2025
56 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 31

குமரி மாவட்டத்தில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளராக 20 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து கட்சித் தொண்டர்களை அரவணைத்து கொண்டு சென்றவர் சுரேஷ் ராஜன் ஆவார். இவர் அமைச்சராக இருந்த போதும், இல்லாத போதும், உடன்பிறப்புகளுக்கு உற்ற உறுதுணையாக இருந்து கட்சியை வழிநடத்திச் சென்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சராக இருந்தபோது மற்ற கட்சியினர் திமுகவுக்கு எதிராக வரும்போது அதைக் கடுமையாக எதிர்த்து நின்றவர் இதனால் மற்ற கட்சியினர் சற்று வலுவிழந்தே காணப்பட்டனர். இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும் அண்மை காலமாக குமரி மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் நிலை சற்று பரிதாபமாகவே இருந்து வருவதாகவே கூறப்படுகிறது. தற்போது ஆளுங்கட்சியாக இருந்து வரும் திமுகவின் நிகழ்ச்சிகளிலும், கழக உடன்பிறப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படாமல் ஒதுக்கப்பட்டு வேறு கட்சியை சார்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகளும் இருந்து வருகிறது.
குமரி மாவட்டத்தை பொருத்த அளவில் திமுக 2021 தேர்தலுக்கு முன்பு இருந்த வலிமை மாவட்டச் செயலாளர் மாற்றத்திற்கு பின் சற்று பின்னோக்கி செல்லத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதே நிலை தொடருமானால் குமரி மாவட்ட திமுக தனது பலத்தை வெகு விரைவில் இழந்துவிடும் என்பதை நன்கு உணர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜன் கட்சித் தொண்டர்களை அரவணைத்து அரன் போல் பாதுகாத்து வருகிறார். இவர் போன்றவர்கள் இல்லை என்றால் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சொன்னது போல் கட்சித் தலைமைக்கு குமரி ஒரு தொல்லையாகவே அமையும். அவ்வாறு அமைந்து விடக் கூடாது என்பதற்காக தான் பதவியில் இல்லை என்றாலும் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களை இன்றும் அரவணைத்து தன்னால் இயன்றதை செய்து குமரி மாவட்ட திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருவதால் உண்மையான உடன்பிறப்புகள் அவரை சுற்றி வலம் வருவதாக கூறப்படுகிறது.

நடந்தது என்ன முன்னாள் அமைச்சர் விளக்கம் :-

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வைச் சேர்ந்த மறைந்த டாக்டர் ஆல்பனின் 26-வது நினைவுநாள் பொதுக்கூட்டம் ஆற்றூர் பகுதியில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், “எனக்கு முன்பாக பேசிய விஜிலா சத்யானந்த், கட்சிக்காரர்கள் எல்லாம் சிதறிக்கிடக்கிறார்கள் என்று சொன்னார்கள். மேற்கு பகுதியைப் பற்றி எனக்கு தெரியவில்லை. கிழக்கு பகுதியை பொறுத்தமட்டில் ஒரு குரங்கு கையில் மாலையை கொடுத்தால் பூக்கள் எப்படி சிதறிப்போகுமோ அதுமாதிரிதான் கிழக்கு பகுதி இருக்கிறது. இதை தலைமை உணரும் என்று நான் எதிரார்த்துக் கொண்டிருக்கிறேன்” என பேசினார். சுரேஷ்ராஜன் பொது மேடையிலேயே இப்படி பேசியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது சுரேஷ்ராஜன் தி.மு.க தணிக்கை குழு உறுப்பினராக உள்ளார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன்மீது போடப்பட்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த மாதம் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் மேற்கு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்டம் குறித்து சுரேஷ்ராஜன் பேசியதுதான் விமர்சனத்துக்கு காரணமாக மாறியது. இதுபற்றி முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனிடம் விளக்கம் கேட்டு பேசினோம், “வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பது நம் தலைவரின் எண்ணம். அதை நிறைவேற்ற வேண்டும். கிழக்கு மாவட்டத்தில் சிலர் பிரிந்து இருக்கிறார்கள். பொறுப்பு இல்லை என்று யாரும் ஒதுங்கி இருக்காதீர்கள். பிரிந்து இருப்பவர்கள் எல்லோரும் தேர்தலில் ஒன்றாக இருக்க வேண்டும். தி.மு.க குடும்பத்தில் நாம் ஒன்றாக இருந்து தேர்தல் வேலையை பார்க்க வேண்டும் எனபதற்கு எடுத்துக்காட்டுக்காக அந்த வார்த்தையை நான் சொன்னேன். எதிராளிகள் வேண்டும் என்றே அதை திசைதிருப்புகிறார்கள்” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் ‘அன்பு கரங்கள்’ திட்டத்தில் 106 குழந்தைகளுக்கு அடையாள அட்டை
கொல்லங்கோடு அருகே 133 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: மூதாட்டி மீது வழக்கு
ஸ்ரீநயினார் நீலகண்ட சுவாமி கோயிலில் கொடியேற்றம்
கன்னியாகுமரியில் படகு சேவை 1 மணி நேரம் அதிகரிப்பு: கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பெண்களின் போராட்டம் எதிரொலி: டாஸ்மாக் கடை அகற்றம்

May 18, 2026
26 Views
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்; வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பக்ரீத் பண்டிகை யொட்டி 1500 பேருக்கு பிரியாணி அரிசி
நாகர்கோவிலில் அதிமுக சார்பில் மனித சங்கில் போராட்டம்
கன்னியாகுமரியில் “சாகர்கவாச் ஆபரேஷன்” பாதுகாப்பு ஒத்திகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account