குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக முப்பெரு திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பூதப்பாண்டி வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ஜெரோன் முன்னிலை வகித்தார். இதில் செயலாளர் சுப்பிரமணிய ராஜன், பொருளாளர் வே. ஐயப்பன், இணைச் செயலாளர் சாம்ராஜ் நூலகர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், பாபு, முன்னாள் நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள், பூதப்பாண்டி வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



