தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ . மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். நகரச் செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், காவேரி, வைகுந்தம், மல்லமுத்து, செல்வராஜ், வீரமணி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்வராஜ், ராஜகோபால், கார்த்திக் ,அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சீனிவாசன், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சூர்யா கிருஷ்ணகுமார், மாநில தொழில் நுட்ப அணி துணைச் செயலாளர் தருண் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், தர்மசெல்வன் மற்றும் செந்தில்குமார், செல்வராஜ்,உமா சங்கர், ஆறுமுகம், ரேணுகாதேவி, தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலைச்செல்வன் நன்றி கூறினார்.



