திண்டுக்கல் ஆகஸ்ட் :1
திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை மற்றும் சமூக நலத்துறை இணைந்து ரிதன் டெக்ஸ் மில்லில் உள்புகார் குழு அறிமுக கூட்டம் நடைபெற்றது. அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூப பாலன் தலைமையிலும், அமைதி அறக்கட்டளையின் மேலாளர் டாக்டர்.ஆ.சீனிவாசன் மற்றும் மில் நிறுவனர் விஷ்ணு முன்னிலையிலும், திட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா சிறப்புரையிலும் இக்கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் மணிமேகலை மற்றும் திவ்யா ஆகியோர் உள்புகார் குழு குறித்த பயிற்சி வழங்கினார்கள். 10-க்கு மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் இடங்களில் உள் புகார் குழு அமைக்க வேண்டிய அவசியம், குழுவின் செயல்பாடுகள்,பெண்களுக்கு பாலியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான தொந்தரவுகள் ஏற்படும் போது எடுக்கப்படும் சட்ட ரீதியான மற்றும் நிறுவன ரீதியான நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் அவசர உதவி எண் :181 குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. ஆழ்ந்த சுவாசம் மற்றும் மூச்சு பயிற்சி போன்ற புத்துணர்ச்சி செயல்பாடுகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன. மேலும் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நமது உரிமை பற்றியும், மன அழுத்தம் மற்றும் நேர்மறையான எதிர்கொள்ளும் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் மன அழுத்த அறிகுறிகள் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நமக்கு இருக்கும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.கூட்டத்தின் முடிவில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மற்றும்
சிறப்பு பயிற்சி வழங்கிய அமைதி அறக்கட்டளை பணியாளர்களுக்கும் பஞ்சாலை சார்பாக உள் புகார் குழு உறுப்பினர் மோகனசூர்யா நன்றி கூறினார்.