ஊட்டி. டிச. 29.
உதகையில் சர்வதேச குறும்பட விழா தொடங்கியது. துவங்கியது.மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார.
இந்த சர்வதேச குறும்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் ஜெர்மனியில் நடைபெறும் குறும்பட விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கலை ஆர்வம் கொண்ட சிலர் குழுவாக இணைந்து கடந்த சில ஆண்டுகளாகக் தொடர்ந்து குறும்பட விழா நடத்தி வருகின்றனர். திரைப்படத்துக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் குறும்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்தக் குறும்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பு வாய்ந்த குறும்படங்களைத் திரையிட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த குறும்படங்கள் மற்றும் குறும்பட கலைஞர்களை ஊக்கப்படுத்தி அங்கீகாரம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான குறும்பட விழா உதகையில் உள்ள அசெம்பிளி ரூம்ஸ் அரசுத் திரையரங்கில் இன்று மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இன்று துவங்கிய குறும்பட திருவிழா வரும் 29ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைப்பெறவுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் குறும்பட விழாவில் 50 நாடுகளைச் சேர்ந்த 550க்கும் மேற்ப்பட்ட குறும்படங்களைத் திரையிடப்பட உள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்கள் என்று அழைக்கப்படும் தோடர் இன பழங்குடியின மக்களின் வாழ்க்கையை குறித்த குறும்படமும் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது.
சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகருக்கான தங்க யானை விருதுகளை விழாவின் நிறைவு நாளான 29ம் தேதி வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஊட்டி குறும்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் நடைபெறும் குறும்பட விழாவில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் நிறைவு விழாவில் தமிழக திரையுலக இயக்குனர்கள் கலந்துகொண்டு தேர்ந்தெடுக்கப்படும் குரும்படங்களுக்கு தங்க யானை விருதினை வழங்குவார்கள். சென்ற முறை இயக்குநர் பாரதிராஜா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.