மதுரை மே 21,
மதுரையில் வைரஸ் காய்ச்சலுக்கு தீவிர பரிசோதனை – டீன்
மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான தனி வார்டு ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், குழந்தைகளுக்கும் தனி சிகிச்சை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
டீன் (பொறுப்பு) தர்மராஜ் கூறும் போது, பொதுமக்களுக்கு எந்த வகையான வைரஸ் காய்ச்சல் அறிகுறியாக இருந்தாலும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட தனி வார்டு, டெங்கு காய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, கொசு வலையுடன் சிறப்பு படுக்கைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் தயார் நிலையில் உள்ளன. இதுபோல், குழந்தைகளுக்கான சிறப்பு காய்ச்சல் பிரிவும் தொடங்கப்பட்டு, இங்கு கொசு வலைகள் அனைத்தும் படுக்கைகளில் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் பாதித்தோருக்கு சிறப்பு சிகிச்சை வழங்கிட ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கிறது. மழைகாலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த, காய்ச்சல் பாதித்த அனைவருக்கும் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று டீன் தெரிவித்துள்ளார்.