ஜன:3
இந்தியாவின் முதல் பிரதமராக 17 ஆண்டுகள் சிறப்பான முறையில் பணிபுரிந்து பல்வேறு துறைகளில் இந்தியாவை முன்னேற்றி “நவபாரத சிற்பி ” என பண்டித ஜவஹர்லால் நேரு போற்றப்படுகிறார். அவர் குறித்து STAND UP COMEDY என்ற பெயரில் கீழ்த்தரமாக கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்து மக்கள் மனது புண்படும் வகையில் பேசிய பரத் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரை சந்தித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறையின் சார்பாக அஸ்மத்துல்லா புகார் அளித்துள்ளார். அதன் பேரில்
CSR பதிவு செய்யப்பட்டுள்ளது.