கிருஷ்ணகிரி,ஜுன்.24- சென்னையில் தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வாக உதவியாளர்கள் சங்கத்தின் சிறப்பு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெ. முத்துக்குமார், எழுத்தாளர் ராஜா தமிழ்மாறன், ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ், பள்ளி கல்வித்துறை அரசு சார்பு செயலாளர் கோபால், ஆகியோர் கலந்து கொண்டு 2024-25,2025-26 ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு பதவி ஏற்பு விழா மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பொறுப்பாளர்களுக்கான கடமை பற்றிய அறிவுரைகளை வழங்கி வாழ்த்தி சிறப்பு உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநில தலைவர் ம.அர்ஜுன், மாநில செயலாளர் ப.ஞானவேல்,மாநில பொருளாளர் கு.ரகு,மாநில மகளிர் அணி தலைவி க. கௌதமி, மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜகணபதி மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



