நாகர்கோவில், நவ. 27 –
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் வைத்து சட்ட சேவைகள் ஆணையத்தின் சட்ட சேவைகளை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படக் கண்காட்சி தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.
இந்த கண்காட்சியை கூடுதல் நீதிபதிகள் சுந்தரையா, கிரி, செல்வகுமார், குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் உதய சூர்யா, முதன்மை குற்றவியல் நீதிபதி செல்வன் ஜேசு ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முதன்மை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் பங்கேற்று புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். முன்னதாக இந்திய அரசியலமைப்பு முன்னுரை வாசித்து தேசியக்கொடியை ஏற்றினார். இதில் முதன்மை சார்பு நீதிபதி ஜெய்சங்கர், சிறப்பு வனவழக்கு நீதிபதி கலையரசி ரீனா, குற்றவியல் நீதிபதிகள் விஜயலட்சுமி, சத்தியமூர்த்தி, அருண்குமார், விசு, வழக்கறிஞர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



