நாகர்கோவில் ஏப் 7
குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தேசிய வறுமை ஒழிப்புத் திட்ட நிலுவை தொகை 3900கோடியை தமிழகத்துக்கு வழங்கிட கோரியும்,இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வக்ஃப் சட்ட திருத்தத்தை கைவிட கோரி ஒன்றிய பி.ஜே.பி.அரசை வலியுறுத்தியும் பூதப்பாண்டியில் மின் அலுவலகத்தை உடனே கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரியும், அருமநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனே சீரமைக்க வலியுறுத்தியும், பூதப்பாண்டி பூதலிங்கசாமி தேரின் கீழ் தளத்தை சமன் செய்து கூண்டு அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட குழு உறுப்பினர் தா.மகேஷ் தலைமை வகித்தார்.இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.அனில்குமார் போராட்டத்தை தொடங்கிவைத்தார்.அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தோழர் கே.சஜேஷ், அனைத்திந்திய முற்போக்குக் பேரவையின் மாநில துணைத்தலைவர் எஸ்.சுந்தரம்,இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் தோழியர் செல்வராணி, செம்பை தங்கம் ஷோபணா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தோவாளை தாலுகா செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் ஆரல் மாநகர பொருளாளர் சி.வாசு உட்பட முக்கிய தோழர்கள் கருத்துரை ஆற்றினர்.இறுதியில் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தா.சுபாஷ் சந்திர போஸ் முடித்து வைத்தார்.ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டது.திரளான தோழர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.