கீழக்கரை ஜுலை 09-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே
தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில்
500 பிளாட் மக்கள் நலன் முன்னேற்ற சங்கம் திறப்பு
விழா சங்கத்தின் தலைவர் நியாஸ் தலைமையில்
சங்கத்தின் செயலாளர் பாரூக் ராஜா முஹம்மது
சங்கத்தின் பொருளாளர் ஹுசைன் ஆகியோர்
முன்னிலையில் நடைபெற்றது இவ்விழாவில்
கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முகம்மது சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தை திறந்து
வைத்தார். விழாவில் துணை வட்டாட்சியர்
பரமசிவம் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற
தலைவர்கிருஷ்ணமூர்த்தி
துணைத்தலைவர்
மஹ்சூக் பானு சமூக ஆர்வலர் அஜீகர், கீழக்கரை
18 வாலிபர்கள் தர்கா ஜகாத் கமிட்டி
தலைவர் ஜாகிர் உசேன் எஸ்டிபிஐ கட்சியின்
தொகுதி பொருளாளர் கீழை அசரப், சமூக ஆர்வலர்
நசுருதீன், 500 பிளேட் பகுதி ஜமாத் நிர்வாகிகள்,
சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர்
திரளாக கலந்து கொண்டு வாழ்த்துக்களை
தெரிவித்தனர்.