பொள்ளாச்சி
ஆகஸ்ட்: 13
பொள்ளாச்சி ரோடராக்ட் கிளப் ஆப் கிரீன் பேரடைஸ் சங்கத்தின் 4 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி. வ.ஜெயராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கௌரவ விருந்தினர்களாக ரோட்டரி சங்கத்தின் மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் Rtn. MD.Ben.V.G. ஆனந்தராம்,
பொள்ளாச்சி நகராட்சியின் முன்னாள் தலைவர் .V. கிருஷ்ணகுமார் அவர்கள், பொள்ளாச்சி ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.சிவனடியான், செயலாளர் Rtn. பிரவீன் ராஜு, மாவட்ட ரோடரக்ட் பிரதிநிதி தேர்வு Rtr. செல்வ விக்னேஷ் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 2023-2024 ஆம் ஆண்டுக்கான முன்னாள் தலைவர் Rtr. தர்ஷினி புதிய தலைவராக Rtr. முகமது சல்மான், செயலாளராக Rtr. கலைவாணி ஆகியோருக்கு பதவிப் பிராமாணம் செய்து வைத்தார், மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். மேலும் பொள்ளாச்சியின் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி. V. ஜெயராமன் அவர்களுக்கு “ஐ கான் ஆப் பொள்ளாச்சி” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் ரோடரக்ட் கிளப் ஆப் 2024 கான பொள்ளாச்சி கிரீன் பேரடைஸ் சங்கத்தின் புதிய பல சேவைத் திட்டங்களை துவக்கி வைத்தனர்.