கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம், ஜெகதாப் கிராமத்திலுள்ள பவித்திரன் அசெப்டிக் ப்ரூட் ப்ராடக்ட்ஸ் மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு. அவர்கள் நேரில் பார்வையிட்டு மாம்பழக் கூழ் தயாரிப்பு முறைகளை கேட்டறிந்தார்.
தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு 2023-24 ஆம் ஆண்டில் பாரதப் பிரதமரின் ஒரு மாவட்டத்திற்கு ஒரு தொழில்திட்டம் ஒன் டிஸ்ட்ரிக்ட் ஒன் ப்ராஜெக்ட் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மா விளைச்சலை அதிகமாக கொண்டுள்ளதால் மாம்பழக்கூழ் தயாரிப்பு தொழில்களின் முன்னேற்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனத்தில், விவசாயிகளிடமிருந்து மா கொள்முதல், முதல் நிலை சுத்திகரிப்பு பணிகள், நவீன இயந்திரம் மூலம் மாம்பழகூழ் உற்பத்தி, டின்கள் மூலம் மாம்பழகூழ் சேமிப்பு, குளிர்ப்பதன அறையில் பதப்படுத்தும் பணிகள், மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார்.
இவ்வாய்வின் போது, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் . பிரசன்ன பாலமுருகன், மற்றும் திட்டமேலாளர் .இராமமூர்த்தி, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் . மாதவன், ஆகியோர் உடனிருந்தனர்.