மதுரை அக்டோபர் 22,
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் குடமுழுக்கு முன்னேற்பாடாக கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு சலனமில்லாமல் பாலாலயம் நடத்திட 21.10.2024 திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாஹவாசனம். நான்காம் கால யாகபூஜை, த்ரவ்யாஹுதி, மஹாபூர்ணாஹுதி தொடர்ந்து மஹாதீபாராதனை, யாத்ராதானத்துடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர சுவாமி திருக்கோயில் கோபுரங்கள் மற்றும் விமானங்களுக்கு பாலாலயம் பகல் 12.15 மணி முதல் 12.30 மணிக்குள் மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை, துணை ஆணையர் / சரிபார்ப்பு அலுவலர் மற்றும் குழுவினர் முன்னிலையில் இத்திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்கள். இத்திருக்கோயில் இணை ஆணையர் / நிர்வாக அதிகாரி, அர்ச்சகர்கள், பணியாளர்கள். உபயதாரர்கள் முன்னிலையில் பாலாலயம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.