கிருஷ்ணகிரி,செப்.5- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் தபால்மேடு பேருந்து நிலையத்தில் அதிமுக புதிய உறுப்பினர்களுக்கு அதிமுக அடையாள அட்டைகளை மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர். மு. தம்பிதுரை கலந்து கொண்டு வழங்கினார். மல்லபாடி, பட்லபள்ளி, சிகரலபள்ளி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயபால், மாவட்ட மாணவரணி வெற்றிசெல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் கோ.ரவிச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தூயமணி, அதிமுக பிரமுகர் முரளி, கிளை செயலாளர் செல்வராஜ், கே.என்.முருகன், உள்பட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



