நிலக்கோட்டை,செப்.13 திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டையில் அதிமுக இணைந்த புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏ தேன்மொழி சேகர் பங்கேற்று உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமை வகித்தார், முன்னால் பாரளுமன்ற உறுப்பினர் உதயகுமார் முன்னிலை வகித்தார்,
நகரச் செயலாளர் சேகர் முன்னிலை வகித்து வரவேற்பு செய்தார், இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் சுமார் 5000-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் தண்டபாணி நிர்வாகிகள் மோகன்குமார், தவமணி மூர்த்தி ஆகியோர் உட்பட மாவட்ட ஒன்றிய நகர மற்றும் வார்டு செயலாளர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.