வேலூர் 07
பாஜகவினர் அவர்கள் கொள்கைக்காக கையைழுத்து இயக்கம் நடத்துகிறார்கள் எங்கள் கொள்கை இருமொழி கொள்கை
தமிழகத்தில் தொகுதிகள் குறைய கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்
காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
இந்த விழாவில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி
சாந்தகுமாரி வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவருடைய மனைவி சங்கீதா கதிர ஆனந்த் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
விழாவில் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அனைவருக்கும் சீர்வரிசை பொருட்களை துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி துரைமுருகன் ஆகியோர் வழங்கினர்
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது
இங்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொடுக்கப்படும் சீதனம் தாய் வீட்டு சீதனமாக வழங்கப்படுகிறது
இத்தொகுதியில் உள்ள அனைவரின் வீட்டிற்கும் நான் தலைமகன் என்று பேசினார்
பின்னர் மதிமண்டலம் பகுதியில் உள்ள சித்தேரி ஏரியை ரூபாய் 1.6 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது
தென்பெண்ணை பாலாறு இணைப்பிற்கு மறு ஆய்வு செய்ய திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு
தென்பெண்ணை பாலாறு இணைப்பிற்கு மறு ஆய்வு செய்ய முயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன் இன்னும் பத்து நாட்களில் இலாக்காவில் தெரியவரும் என்றார்
பாஜகவினர் கொள்கை தமிழகத்தில் தேவையான கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள் என்ற கேள்விக்கு
அவர்கள் கொள்கைக்கு அவர்கள் கையெழுத்து வாங்குகிறார்கள் எங்கள் கொள்கை இருமொழி கொள்கை என்றார்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இருக்க வேண்டியதில்லை என அண்ணாமலை கூறுகிறார் , ராகுல் காந்தி தொகுதிகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கூறுகிறார் என்ற கேள்விக்கு
ராகுல் காந்தி சொல்கிறாரோ இவர் சொல்கிறாரோ தமிழ்நாட்டில் தொகுதிகள் குறையக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றார்.